சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.160 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனே காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கும், ஒரு கிராம் ரூ.5,510-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, நேற்று ஒரு கிராம் ரூ.5,530-க்கும் ஒரு சவரன் ரூ.44,240-க்கும் விற்பனையானது.
அதேசமயம், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.50 காசுகள் குறைந்து ரூ.77.00-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.500 குறைந்து ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
+ There are no comments
Add yours