தமிழகத்தில் நாளை முதல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கடந்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு: நம்பியூர் (ஈரோடு)- 3 செ.மீ, கூடலூர் பஜார் (நீலகிரி)- 2, மேல் கூடலூர் (நீலகிரி), தலைவாசல் (சேலம்), கொத்தவாச்சேரி (கடலூர்), வுட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), பார்வூட (நீலகிரி), ஹரிசன் மலையாளம் லிமிடெட், செருமுல்லி (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி) தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 39.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.
தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை, 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி , மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35- 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
+ There are no comments
Add yours