இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த ‘Mission Range Speaker’ வளர்மதி அவர்கள் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த இரங்கல் பதிவில், ‘இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த ‘Mission Range Speaker’ வளர்மதி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். மிகவும் சவாலான ஒரு பணியைத் திறம்படக் கையாண்டு, இஸ்ரோவின் முக்கியத் திட்டப்பணிகளுடைய வெற்றித் தருணங்களின் குரலாக ஒலித்த வளர்மதியின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவரது பணியிடத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours