மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, “மானுட சமத்துவத்தைப் பாடிய ஒப்பற்ற கவிஞன் பாரதியாரின் நினைவுகளைப் போற்றுகிறேன்” என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் டுவீட் செய்துள்ளார்.
புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆன கமல்ஹாசன் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.
சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த திரைப்பட தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்கள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள் மற்றும் 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல இந்திய விருதுகளை வென்றுள்ளார்.
அதன் பின்னர், தான் அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்த அவர், கடந்த 2018 பிப்ரவரி 21, அன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் தனது கட்சியின் பெயர் “மக்கள் நீதி மய்யம்” என அறிவித்தார்.
இந்நிலையில், இன்று மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தனது X வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்..
“36 ஆண்டுகளுக்கு முன் மய்யம் இதழில் ‘பாரதியின் கவிதைகள் எனக்குத் தாய்’ என்று எழுதியிருக்கிறேன். அப்போது என் வயது 33. அந்த உணர்வும், பாரதி தந்த நெருப்பும் துளியும் குறையவில்லை.
பாரதி நமக்கு எண்ணற்ற பாதைகளைக் காட்டிச் சென்றிருக்கிறார். அதில் முதன்மையானது ‘கேளடா மானிடவா – எம்மில் கீழோர் மேலோர் இல்லை. மீளா அடிமை யில்லை – எல்லோரும் வேந்தரெனத் திரிவோம்’. மானுட சமத்துவத்தைப் பாடிய ஒப்பற்ற கவிஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.
+ There are no comments
Add yours