கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவை பாஜக முழுமையாக வரவேற்கிறது. நாடாளுமன்றம், சட்டமன்றம் என ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை பல நாடுகளில் அமலில் இருக்கிறது. இந்தோனேசியா, பெலிஜியம், தென் ஆப்பிரிக்கா உள்பட பல நாடுகளில் இருக்கிறது.
எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை பாஜக முழுமையாக வரவேற்கிறது. தேர்தல்கள் மாறி மாறி வருவதால் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடந்தால், தேர்தல் செலவு குறையும். இந்தியாவின் வளர்ச்சி அதிகப்படும். அதிகாரிகளுக்கு சுமை குறையும் என்றார். இதனைத்தொடர்ந்து சீமான் பேசியது தொடர்பாக அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், சீமானை விட 1% அல்ல, 30% வாக்குகளை வாங்கி காட்டுவேன். சவாலுக்கு தயார் என்றார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை யாரும் சேர்த்து கொள்ளாததால் தேர்தலில் தனியாக நிற்கிறார்கள். எனவே, நாம் தமிழர் கட்சியை விட 30% அதிகமான வாக்குகளை பாஜக பெறும். நாம் தமிழர் கட்சி 2024க்கு பின்னர் இருக்காது. வெறுப்பை விதைத்து கட்சி நடத்த முடியாது என தெரிவித்தார்.
சீமானை விட அதிக வாக்குகள் வாங்குவேன்.. சவாலுக்கு தயார் – அண்ணாமலை

+ There are no comments
Add yours