“தாலியை கழட்ட மாட்டேன்”… மாரிமுத்து மனைவியின் தீர்க்கமான முடிவு!!

Spread the love

எதிர்நீச்சல் மாரிமுத்துவின் மனைவி தனது கணவர் மறைந்த பின்னரும் தாலியை கழட்ட மாட்டேன் என்கிற முடிவில் தீர்க்கமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் மாரிமுத்து. கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சினிமாவில்பணியாற்றி வந்தாலும், மாரிமுத்துவுக்கு திருப்புமுனையாக அமைந்தது சான் டீவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் தான்.

இந்த சீரியலில் அவர் நடித்த ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரதிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த சீரியலில் அவர் பேசிய, டயலாக்குகள் எல்லாம் மீம் டெம்பிளேட்டுகளாக மாறும் அளவுக்கு பேமஸ் ஆகின. அதிலும் குறிப்பாக “இந்தாம்மா ஏய்” என்கிற வசனம் வேறலெவலில் மக்களிடம் ரீச் ஆனது.

புகழின் உச்சிக்கு சென்ற மாரிமுத்துவுக்கு சினிமாவில் பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருந்தன. அண்மையில் ஜெயிலர் படத்தில் நடித்திருந்த அவர், அதன் பின்னர் கங்குவா, இந்தியன் 2 போன்ற பிரம்மாண்ட படங்களையும் கைவசம் வைத்திருந்த அவர் சினிமா, சின்னத்திரை இரண்டிலும் பிசியாக இருந்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்ற அவர் மரணமடைந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அவரின் மறைவுக்கு சினிமா, சின்னத்திரை என ஏராளமான பிரபலங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சென்னையில் இருந்து மாரிமுத்துவின் சொந்த ஊரான தேனிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.

கணவனை இழந்த மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அதாவது மாரிமுத்துவின் மனைவி தன கணவன் கட்டிய தாலியை கடைசிவரை கழட்டவே கூடாது என்கிற முடிவில் இருக்கிறாராம்.

தன் கணவரின் நினைவாக எப்போதும் தாலியை அணிந்திருக்க போவதாகவும், அது தன்னிடம் இருந்தால் தன் கணவரே தன்னுடன் இருக்கும் ஓர் உணர்வு இருப்பதால் இந்த முடிவை எடுத்திருபதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த துணிச்சலான முடிவுக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours