இந்தியாவின் மிக முக்கிய பொறுப்புகளுக்காக நடத்தப்படும் UPSC தேர்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்ச்சி பெற்றால் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விட்டுள்ளார் .
திருநெல்வேலியில் மேற்கொண்ட என் மண் என் மக்கள் நடைப்பயணத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது :
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை தேர்தலில் போட்டியிட சொல்லும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அவரது பதவியை துறந்து UPSC முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன் என்று தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் சாதாரண டிஎன்பிஎஸ்சி அல்லது சிவில் தேர்வு இல்லையென்றால் குரூப் 4 தேர்விலாவது தேர்ச்சி பெற்றுவிட்டு பேசட்டும். திமுகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் அமைச்சர் உதயநிதிக்கு அரசியலைப்பு சட்டத்தை நன்றாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நீட் மசோதா ஜனாதிபதியிடம் இருக்கிறது. அவர் மசோதாவை நிராகரித்தால், ஜனாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சொல்வாரா உதயநிதி ?
உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினிகாந்து விழுந்து வணங்கியதில் எந்த தவறும் இல்லை . யோகி ஆதித்யநாத் ஆட்சி மட்டும் தமிழ்நாட்டில் வந்திருந்தால் நல்லாட்சியாக அமைந்திருக்கும்.
வேலையில்லாத அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் குறித்து தேவையில்லாத கருத்துகளை கூறுகின்றன குறி சொல்பவர்கள் சாகும் வரை குறைகூறி கொன்டே தான் இருப்பார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours