கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய பணத்திற்கு 15% வட்டி வழங்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கரும்பு விவசாயிகளுக்கு வட்டி வழங்குவது தொடர்பாக திருச்சி, தஞ்சை, தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆட்சியர்கள் பதிலளிக்க மதுரை கிளை ஆணையிட்டது.
அதாவது, சக்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய கால தாமதத்திற்கான பணத்திற்கு 15% வட்டி வழங்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இதில், மத்திய வேளாண்துறை முதன்மை செயலாளர் உள்பட 6 மாவட்ட ஆட்சி தலைவர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை சுவாமிமலையை சேர்ந்த சுந்தர விமல்நாதன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்எஸ் சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு இவ்வாறு ஆணையிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். கரும்பு தந்ததற்கான நிலுவை தொகைக்கு பல சக்கரை ஆலைகள் வட்டி தொகை வழங்கவில்லை, 2017-23ம் ஆண்டு வரை வட்டி தொகை முறையாக வழங்கவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours