பாரதியார் தான் அணிந்த பூணூலை அகற்றினாலும், ஆதி திராவிட வகுப்பை சேர்ந்த கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்த உண்மை தெரியுமா திருமாவளவன் அவர்களே? அப்படியானால், பூணூல் அணியாத பாரதியார் இழிவானவரா? என திருமாவளவனுக்கு நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார்.
திருமாவளவன் விமர்சனம்:
நந்தனார் பிறந்த ஊர் ஆதனூரில் 100 பறையர்களுக்கு பூணூல் அணிவிக்காறாராம் ஆளுநர் சனாதனி ஆர்என்ரவி அவர்கள். இது மேன்மைப் படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுப் படுத்துவதாகும். இதுதான் சனாதனம் ஆகும்.
இதன்மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? என திருமாவளவன் விமர்சித்து இருந்தார்.
பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? என திருமாவளவன் விமர்சித்து இருந்த நிலையில்,பூணூல் அணியாத பாரதியார் இழிவானவரா? என திருமாவளவனுக்கு நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
பிராமணர் அல்லாத 100 பேருக்கு பூணூல் அணிவிக்கப்போவதாக கூறியதற்காக, இதன்மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? என்று கேட்டிருக்கிறார் தொல்.திருமாவளவன் அவர்கள்.
அப்படியென்றால், அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண்டும் என்று துடி துடித்தது ஏன்? அவர்கள் பூணூல் அணிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது ஏன்? அனைத்து சாதியினரும் பூணூல் அணிந்துகொண்டு தான் அர்ச்சகர்களாக வேண்டும் என அரசு சொல்வது ஏன்? என திருமாவளவன் விளக்குவாரா?
“வேண்டியவர்களெல்லாம் பூணூல் அணிந்து கொள்ளலாம். அது யாகத்துக்கு வெளியடையாளமாக அந்தக்காலத்தில் ஏற்பட்டது. இஷ்டமான ஹிந்துக்களெல்லாம் பூணூல் போட்டுக்கொள்ளலாம். மற்றவர்கள் சரிசமானமாக இருக்கலாம். பூணூல் இருந்தாலும் ஒன்று தான், இல்லாவிட்டாலும் ஒன்று தான். ஹிந்துக்களெல்லாம் ஒரே குடும்பம். அன்பு காப்பாற்றும். அன்பே தாரகம்” என்றார் பாரதியார் 1907ம் ஆண்டு, அதாவது 126 ஆண்டுகளுக்கு முன்பு.
பாரதியார் தான் அணிந்த பூணூலை அகற்றினாலும், ஆதி திராவிட வகுப்பை சேர்ந்த கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்த உண்மை தெரியுமா திருமாவளவன் அவர்களே? அப்படியானால், பூணூல் அணியாத பாரதியார் இழிவானவரா?
பூணூல் அணிந்தவர்கள் தான் மேலானவர்கள் என்றால், ஆதிதிராவிடர்கள் பூணூல் அணிய முடியுமா என்று கேட்டு விட்டு பின்னர் பூணூல் அணியாதவர்கள் இழிவானவர்களா என்று கேட்பது முன்னுக்கு பின் முரண் இல்லையா திருமாவளவன் அவர்களே?
தேவையற்ற, காலத்திற்குதவாத விவகாரங்களை மக்கள் மத்தியில் தூண்டி விட்டு அரசியல் குளிர் காய்வதை தவிர்த்து, பாரதியாரின் வழியில் சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடுங்கள் திருமாவளவன் அவர்களே என குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours