பாஜகவிற்கு அடிமையானதா அதிமுக… முதலமைச்சர் கூறியதென்ன!

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரில் தென்மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றது திமுக ஆட்சி என கூறினார். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டு வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னுரிமை தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

வாக்காளர்கள் பட்டியலை சரிப்பார்ப்பதே முதல் பணி என திமுக முகவர்களுக்கு அறிவுறுத்தினார். ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு திமுக அரசு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக பட்டியலிட்டார். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை எனவும் சாடிய அவர், அமைச்சர் எ.வ. வேலு கருத்து வெட்டி, ஒட்டி வாட்ஸ் அப்பில் பரவி
வரும் செய்திகளை பிரதமர் மோடி நம்புவது அழகல்ல என்றும் முதலமைச்சர் அவேசமாக பேசினார்.

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க டெல்லியில் இருந்து டெண்டர் வரவே 9 ஆண்டுகாலம் ஆகிவிட்டது எனவும், தற்போது டெண்டர் வெளியாகியுள்ளதும் தேர்தலுக்கான நாடகமாக இருக்கலாம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். ராமேஸ்வரத்தை சர்வதேச சுற்றுலா தளமாக மாற்றுவேன் என்று மோடி அளித்த வாக்குறுதி எங்கே? எனவும், தனுஷ்கோடிக்கு அமைத்துத் தருவதாக சொன்ன ரயில் பாதை எங்கே என்றும் முதலமைச்சர் சரமாரியாக வினவினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் அடிமையாகவே அதிமுக உள்ளது என விமர்சித்தார். பாஜக ஆட்சியில் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள் என குறிப்பிட்ட அவர், கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மீனவர்களின் கொலைக்கு யார் பொறுப்பு எனவும், முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

தி.மு.க. பேசும் கொள்கைகளை மற்ற கட்சியினரும் பின்பற்றிப் பேசுகிறார்கள் என்பது தான் பா.ஜ.க.விற்கு எரிச்சலாக இருக்கிறது என்றார். மேலும், இண்டியா கூட்டணி வெற்றி பெறாவிட்டால் இந்தியாவை காப்பாற்ற முடியாது என்றும் முதலமைச்சர் சூளுரைத்தார்.

இதனையடுத்து ராமேஸ்வரம் அக்காள்மடம், சேதுபதிநகர் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours