வசூலில் சாதனை படைக்கும் ஜெயிலர் !

Spread the love

நெல்சன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மிரட்டலான கூட்டணியில் உருவான ஜெயிலர் படம் வெளியாகி வசூல் மழையில் நனைந்து வருகிறது .

கோலமாவு கோகிலா , டாக்டர் , பீஸ்ட் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து குறுகிய நாட்களில் சினிமா ரசிகர்களின் மனதில் எளிதில் இடம்பிடித்தவர் இயக்குநர் நெல்சன் . இவரது இயக்கத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் தலைவரின் மாஸான நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஜெயிலர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இப்படத்தில் . தமன்னா, மோகன் லால்,ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ,வசந்த் ரவி , ரெடின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் தங்களது நடிப்பை கட்சிதமாக வெளிப்படுத்தியுள்ளனர் .

ராக் ஸ்டார் அனிருத் ,சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , மோகன் லால் , சிவராஜ்குமார் உள்ளிட்ட சென்சேஷனல் நபர்கள் இப்படத்தில் அடுத்தடுத்து கமிட்டாக ஜெயிலர் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் கோலாகலமாக வெளியாகிய நிலையில் தற்போது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ளது.

இப்படம் வெளிவந்த முதல் நாள் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்த நிலையில் ஒவ்வொரு நாளும் வசூலில் உச்சத்தை தொட்டுக்கொண்டே போகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படம் வெளியாகி 13 நாட்களில் உலகளவில் ரூ. 525 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours