ஜெயிலர் படம் கொடுத்த மாபெரும் பிளாக் பஸ்டர் வெற்றியால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு சிறப்பான தரமான சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்-க்கு புத்தம் புதிய BMW X7 காரை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார் .
நெல்சனின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிரட்டலான நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் மாபெரும் பொருட்செலவில் இப்படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டது .
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ளது.
ராக் ஸ்டார் அனிருத்தின் மாஸான இசையமைப்பில் உருவானா இப்படத்தில் ரஜினிகாந்துடன் கவர்ச்சி நாயகி தமன்னா, மோகன் லால், சிவராஜ்குமார் , ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ,வசந்த் ரவி , ரெடின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் தங்களது நடிப்பை கட்சிதமாக வெளிப்படுத்தியுள்ளனர் .
ஜெயிலர் படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வசூலை ஈட்ட தொடங்கிய நிலையில் இதுவரை இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த டக்கர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இதுவரை உலகளவில் ரூ. 590 கோடி வரை வசூல் செய்துள்ளது.மேலும் இப்படம் விரைவில் 600 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் தலைவரின் கம் பேக் படமாக அமைந்துள்ள இப்படம் கொடுத்த மாபெரும் பிளாக் பஸ்டர் வெற்றியால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு சிறப்பான தரமான சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்-க்கு புத்தம் புதிய BMW X7 காரை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார் .
இதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு வெவ்வேறு கார்கள் காண்பிக்கப்பட்ட நிலையில், அவர் BMW X7 காரை தேர்வு செய்தார்.மேலும் இதுகுறித்து விடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது .
+ There are no comments
Add yours