தமிழ் திரைப்படங்கள் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அரங்கிலும் கவனத்தை ஈர்த்து வருவதாக தகவல் ஒளிபரப்பு இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் ராஜா முத்தையா அரங்கில் ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டுநாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், திரைப்படங்கள் வெறும் பொழுது போக்கு அம்சமாக மட்டுமில்லாமல் சமூக கருத்துக்களை மக்களிடையே தொடர்ந்து சென்று சேர்த்துவருவதகாவும் கூறினார்.
+ There are no comments
Add yours