மாவீரன் பூலித்தேவர் பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து !

Spread the love

வெள்ளையனே வெளியேறு என்று முதல் விடுதலை குரல் எழுப்பிய மாவீரன் பூலித்தேவன் பிறந்த நாளையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட மாவீரர் பூலித்தேவன் பிறந்த தினம் இன்று.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கமிட்டவர் நெற்கட்டான் செவல் பகுதியை ஆண்ட மன்னர் பூலித்தேவன். ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக, தம் வீர வாளை உயர்த்திய மாவீரர்.

திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு ஆலயங்களுக்கு அணிகலன்கள் வழங்குவது, குளம் அமைத்துக் கொடுத்தது என நாட்டுப்புறப் பாடல்களும் செப்பேடுகளும் இவர் பெருமையைக் கூறுகின்றன.

வீரத்தில் மட்டுமல்ல, இறைபணியிலும் சிறந்து விளங்கிய மாவீரர் பூலித்தேவன் அவர்கள் பெருமையைப் போற்றுவோம் என அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours