மத்திய நிதியமைச்சரை நிர்மலா “மாமி” என்றழைத்த தயாநிதி..” காரசார பதிலடி கொடுத்த நாராயணன் திருப்பதி

Spread the love

அரசியலுக்காக, அதிகாரத்திற்காக, பதவிக்காக, அது தரும் வசதிக்காக, செல்வத்திற்காக, பிராமண சமுதாயத்தை கிண்டல் செய்வது பிழைப்பிற்காக என்று தயாநிதி மாறனை நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சாா்பில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது .

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தயாநிதி மாறன்,மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நிர்மலா “மாமி” என்று பிராமணர்கள் பேசும் தொணியில் பேசியிருந்தார்.

இந்நிலையில் தயாநிதி மாறனின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறிருப்பதாவது :

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நிர்மலா “மாமி” என்று பிராமணர்கள் பேசும் தொணியில் புளகாங்கிதம் அடைகிறார் தயாநிதி மாறன். கிண்டல் செய்வதாக யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

“தொட்டில் பழக்கம்” என்பதன் அடிப்படையிலேயே அப்படி அழைக்கிறார். அதாவது அவரின் தாயார் திருமதி. மல்லிகா மாறன் அவர்கள் பிராமண சமூகத்தை சேர்ந்தவர். கல்யாண சுந்தரம் ஐயரின் மகள். அது மட்டுமல்ல, தயாநிதி மாறனின் மனைவி ப்ரியா தயாநிதி அவர்கள் ஹிந்து குழுமத்தின் இயக்குனர் ரமேஷ் ரங்கராஜன் ஐயங்கார் அவர்களின் மைத்துனி.

பெற்று வளர்த்த தாய், உயிரென கரம் பிடித்திருக்கும் மனைவி – இருவரின் தாக்கம் தயாநிதி மாறன் அவர்களிடம் இருப்பதில் வியப்பில்லை. வீட்டில் கூட அதே தொணியில் பேசிக் கொண்டிருந்தாலும் வியப்பில்லை. தவறில்லை.

அதனால் அம்மாவின், மனைவியின் சமூக பழக்க வழக்கங்கள், சொல்லாடல்கள் மகனிடம், கணவரிடம் இரு‌ப்பது இயல்பு தான். அவர் ஒரு சமூகத்தை ஏளனம் செய்வதாக எண்ண வேண்டாம்.

அரசியலுக்காக, அதிகாரத்திற்காக, பதவிக்காக, அது தரும் வசதிக்காக, செல்வத்திற்காக, பிராமண சமுதாயத்தை கிண்டல் செய்வது பிழைப்பிற்காக என்பது உலகறிந்த உண்மை என நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours