சிவ பக்தியோடு சேர்த்து தேச பக்தியையும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயில் வெளிப்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நமது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று காலை
ஸ்ரீ நடராஜர் முன்பாக நமது தேசியக் கொடி வெள்ளித் தட்டில் வைக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டு, மேள தாளத்துடன் தேசியக் கொடி எடுத்துவரப்பட்டு 152 அடி உயரமுள்ள கிழக்குக் கோபுரத்தில் ஏற்றப்படுவது வழக்கமாக உள்ளது.
இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து தொன்றுதொட்டு நடக்கும் நிகழ்வாகும். இதைப்போலவே 77வது சுதந்திர தினத்திலும் தேசியக்கொடிக்கு அர்ச்சனை செய்யப்பட்டு கோயிலின் கிழக்கு கோபுரத்தில் ஏற்றப்பட்டது.
+ There are no comments
Add yours