கோவை மாவட்டதில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஈஷா யோகா மைய நிறுவனர் வாசுதேவ் தேசிய கோடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காமன்வெல்த் போட்டியின் பொதுச் பொதுச்செயலாளர் பெட்ரிக்கா கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சத்குரு,நாம் வெறும் அரசியல் தேசமாக இருந்தது இல்லை என்றும் மனிதரின் வாழ்விற்கு மிக முக்கியமாக இருக்கும் அறிவியல், கணிதம், கலாச்சாரம், இசை, வானியல் என பலவற்றை உலகிற்கு அளித்த மாபெரும் நாகரிக தேசமாக சிறந்து விளங்குவதாக தெரிவித்தார்.
மேலும் பலவற்றை நாம் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை எனவும் அதனை சரியான முறையில் எடுத்து கூற வில்லை எனவும் தெரிவித்தார். பாரத தேசத்தில் தோன்றிய கணிதம் தான் தற்பொழுது அறிவியலின் முதுகெலும்பாக உள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் கூறுவதாக பெருமிதத்துடன் அவர் தெரிவித்தார்.
தற்போது 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆதியோகி சிலை மீது ஆதியோகி சிலைக்கு தேசிய கொடி போன்று மின்விளக்குகள் அலங்கரிக் கப்பட்டுள்ளது சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்ககு பலரும் கண்டனம் தெரிவித்து வருக்கிறனர். இந்தியாவில் மதம் ,இன ,மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் சமம் என்று எடுத்துரைப்பது தான் தேசிய கொடியை ஆதியோகி சிலை மீது தேசிய கொடி போன்று மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இருப்பது குறித்து பேசு பொருளாக மாறியுள்ளது.
+ There are no comments
Add yours