இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி, குழந்தைகளையும் அறிமுகப்படுத்திய நயன்தாரா…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கியுள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நயன்தாரா முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், ஆர்யா, சிவகார்த்திகேயன்,விஜய்சேதுபதி, சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ் என அனைவரோடும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் அவர், கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

https://www.instagram.com/reel/CwmOAfkvu2M/?utm_source=ig_embed&ig_rid=c2a3002b-6efc-4298-9d24-e494c04474fb

இதனைத் தொடந்து இந்த தம்பதியினருக்கு வாடகை தாய் மூலம் அக்டோபர் 10 ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவ்வப்போது தங்கள் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இயக்குநர் விக்னேஷ் சிவன் மட்டும் பதிவிட்டு வருவார். நயனும் ட்விட்டரில் மட்டுமே ஆக்டிவாக இயங்கி வருகிறார். அவரை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இப்படியான நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கியுள்ளார்.

அதில் முதல் பதிவாக தனது இரட்டை குழந்தைகளை தூக்கிக் கொண்டு ரூமில் இருந்து வெளியே வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ இடம் பெற்றுள்ளது. பின்னணியில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற ‘அலப்பறை கெளப்புறோம்’ பாடல் ஓடுகிறது. மேலும் அதில் ’நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்ற கேப்ஷனும் இடம் பெற்றுள்ளது.இதனைத் தொடர்ந்து நயன்தாராவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை எகிறியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours