காஞ்சிபுரத்தில் தேசிய கைத்தறி தின விழாவை கொண்டாடும் விதமாக பாஜக நெசவாளர் அணி சார்பில் நெசவாளர்கள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகிலிருந்து சட்ட மன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தொடக்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து எம்.எம்.அவின்யூவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது.
பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் நெசவாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வானதி சீனிவாசன்
நமது பட்டு சேலைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் பட்டு வேட்டி, பட்டு சேலை மட்டுமில்லாமல் காஞ்சிபுரம் பட்டு மூலம் கோட், ஸ்கர்ட் ஆடம்பர ஹோட்டல் மற்றும் வீடுகளுக்கு தேவையான திரை சீலைகள், சோபா கவர் உள்ளிட்டவைகளையும் பட்டு மூலம் நவீன முறையில் புதிதாக உருவாக்கி விற்பனை செய்தால் அதை வாங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள் என தெரிவித்தார்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றமே தெளிவான கருத்து தெரிவித்திருக்கிறது. தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்யவும் முடியாது. வாய்ப்பும் இல்லை. தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இதனால் மாணவர்கள் தான் உயிரிழக்கிறார்கள்.
உயிரிழப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி தான் பதில் சொல்ல வேண்டும்.
பள்ளிகளில் நீட் தேர்வுக்கு முறையான பயிற்சிகளும் வழங்கப்படவில்லை.
நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என்று கூறியவரால் நீட் தேர்வை ரத்து செய்யவே முடியாது.
நெசவாளர்களின் நிலையை உணர்ந்து அவர்களின் முன்னேற்றத்திற்காகவே பிரதமர் மோடி ஆண்டு தோறும் ஆகஸ்ட் 7 ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தேசிய கைத்தறி தினத்தை அறிமுகப்படுத்தியவரும் பிரதமர் மோடியே ஆவார்.
ஒரு மாவட்டத்துக்கு ஒரு பொருள் என்ற திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். உதாரணமாக காஞ்சிப்பட்டு,திண்டுக்கல் பூட்டு என்பது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உற்பத்திப் பொருளை பிரபலப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அதை விடுத்து மத்திய அரசைக் குறை கூறிக்கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை. திமுக அரசின் எண்ணமெல்லாம் மோடி அரசை எதிர்ப்பது ஒன்றே குறிக்கோளாக இருக்கிறது என்று வானதி சீனிவாசன் அப்போது குறிப்பிட்டார்.
+ There are no comments
Add yours