சென்னை வர்த்தக மையத்தில் 4,000 பேர் அமரக்கூடிய இருக்கைகளுடன் ரூ.308.75 கோடி மதிப்பில் மாநாடு மற்றும் பொருட்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் ரூ.308.75 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கத் திட்டப்பணிகளான கூடுதல் பொருட்காட்சி மற்றும் மாநாட்டு அரங்கத்திற்கான கட்டுமானப் பணி உள்ளிட்ட விரிவாக்கப் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சிறப்பு:
இந்த வர்த்தக மையத்தில் 9,00,000 சதுர அடி பரப்பளவில் ரூ.308.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 4000 நபர்கள் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம் மற்றும் 5 பொருட்காட்சி அரங்கங்கள், 1300 வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ளன. இந்த கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த தலைமைச் செயலாளர், வேலையாட்களின் எண்ணிக்கையை அதிகரித்து திட்டப்பணிகளை விரைவுபடுத்தி முடிக்கவும், ஜனவரி 2024ல் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர் மாநாடு சிறப்புற நடைபெறும் வகையில் இக்கட்டுமானப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
+ There are no comments
Add yours