பல்வேறு தரப்பு மகளிரின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் வகையில், பேருந்துகளில் அவர்கள் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கக் கொண்டுவரப்பட்ட திட்டத்தின்கீழ் தினசரி 50 லட்சம் மகளிர் பயணிக்கின்றனர்.
இதுவரை இந்தத் திட்டத்தில் சுமார் 314 கோடி முறை பெண்கள் அரசுப் பேருந்துகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தால் ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.850 மேல் சேமிக்க முடிகிறது.
மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆக.25 முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாட்டின் வளர்ச்சி பெண்களிடமிருந்தே தொடங்குகிறது என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறோம் எனவும் அனைவருக்குமான அரசாக, அனைவரின் வளர்ச்சிக்குமான அரசாக செயல்பட்டு வருகிறோம் எனவும் ஏறத்தாழ ஒரு கோடி மகளிர் மாதம்தோறும் பயனடையும் வகையில் ’கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அடுத்த மாதம் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்பட இருக்கிறது எனவும் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் பயணிக்கும் திட்டத்துக்கு “விடியல் பயணம்” என்று பெயர் சூட்டப்படுகிறது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours