மிஷ்கினை செருப்பால் அடிப்பேன் என கூறிய நித்யாமேனன் !

Spread the love

இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படங்கள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்பதை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அவர் இயக்கிய படங்களை பார்த்தாலே அது நமக்கு புரியும். அவருடைய இயக்கத்தில் சிறந்த ஒரு திரைப்படமாக பல படங்கள் உள்ளது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ‘சைக்கோ’ திரைப்படத்தை சொல்லலாம்.

ஏனென்றால், இதுவரை இல்லாத விதமாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் நித்தியாமேனனை வைத்து அவர் திரில்லர் கதை அம்சம் கொண்ட ஒரு பக்காவான படத்தை கொடுத்திருப்பார் . இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனர் மிஷ்கினும் நடிகை நித்யா மேனனும் ஒன்றாக பணியாற்றினார்கள்.

இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு படத்தில் பணியாற்றினார்கள் என்றாலும் கூட இருவரும் அண்ணன், சகோதிரி போன்றவர்கள். பல மேடைகளிலும் பல பேட்டிகளிலும் இயக்குனர் மிஷ்கின் நித்யா மேனன் பற்றி புகழ்ந்து பேசுவதும் நித்யா மேனனும் இயக்குனர் மிஷ்கின் பற்றி புகழ்ந்து பேசுவதும் பார்த்திருப்போம். இந்நிலையில் ஒரு முறை மிஷ்கினை நடிகை நித்யா மேனன் செருப்பால் அடிப்பேன் என்று கூறியதாக இயக்குனர் மிஷ்கினே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ” மிஷ்கின் என்னை பொறுத்தவரை நடிப்பில் பேய் என்றால் நித்யா மேனனை தான் நான் சொல்வேன். எப்படி நடிப்பு திறன் கொண்ட படங்களை கொடுத்தாலும் அவருக்கு பற்றவே பற்றாது. இப்போதெல்லாம் என்னை அவள் திட்டுகிறாள் நான் அவருக்கு கதை எழுதவில்லை என்று. சீக்கிரம் கதை எழுது இல்லனா செருப்பால அடிப்பேன் என திட்டுகிறாள்.

பிறகு கொஞ்சம் பொறு ஒரு கதை எழுதிவிட்டு உன்னிடம் சொல்கிறேன் என கூறி அவருடைய கோபத்தை அடக்கி விடுவேன். என்னுடைய வாழ்க்கையில் அவரை போல ஒருவளை நான் பார்த்தது ரொம்பவே மகிழ்ச்சி. அவள் என்னுடைய சகோதிரியை போன்றவர்” எனவும் மிஷ்கின் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் கதை தயார் சொல்வதற்கெல்லாம் இப்படி சொல்லலாமா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours