6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 12 மாவட்டங்களில் சோதனையின் அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வழங்கும் பழைய நடைமுறையே பின்பற்றப்படும் எனவும், இதற்கு முன்பு வரை பொதுத்தேர்வு தவிர்த்து, மற்ற தேர்வுகளுக்கு மாவட்ட அளவில் ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours