உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர் பிரக்ஞானந்தா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அஜர்பைஜானில் நடைபெற்ற உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினார். இதில் கார்ல்சன் வெற்றி பெறவே உலக செஸ் இறுதிப்போட்டியில் நுழைந்த இளம் வீரர் என்ற பெருமையுடன் பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவினார்.
தொடர்ந்து பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு மற்றும் அரசியல்தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து தாயகம் திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சரின் ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு குடும்பத்துடன் சென்ற பிரக்ஞானந்தா, வெள்ளிப் பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். தமிழ்நாடு அரசு சார்பில் பிரக்ஞானந்தாவுக்கு 30 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை காசோலையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வின்போது, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் உடனிருர்ந்தனர்.
+ There are no comments
Add yours