மாணவர்களுக்கு PTR அட்வைஸ்!!

Spread the love

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடைபெற்ற வது பட்டமளிப்பு விழா PTR பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு 965 மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடைபெற்ற 34ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.

கல்லூரி நிர்வாகம் சார்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் குடும்ப புகைப்படம் வழங்கப்பட்டது. இதனை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெற்றுக் கொண்டார் அப்போது அவருடன் நாடார் மகாஜன சங்க தலைவர் கறிக்கோள் நடராஜன் மற்றும் கல்லூரி நிர்வாக ஆசிரியர்கள் உடன் இருந்தனர்

பட்டமளிப்பு விழாவிற்கு முன்னதாக மாணவ மாணவிகளுக்காக நவீன மயமாக்கப்பட்ட ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகளை திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவில் கல்லூரியில் பயின்ற 965 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

மேலும் இன்று பட்டம் பெறப்போகும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் அவரைப் பெற்ற பெற்றோர்களுக்கும் இன்று ஒரு பொன்னான நாள் எனவே என் வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கல்வியில் மாணவ- மாணவிகள் சிறந்து விளங்கி எதிர்கால இந்தியாவில் கல்வி புரட்சியை ஏற்படுத்த பாடுபட வேண்டும், மாணவ மாணவிகள் தொலைநோக்கு சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று என மாணவ – மாணவிகளுக்கு அறிவுரை கூறி சிறப்பித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours