விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறை தேதியை மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் 18ம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறை 17-ஆம் தேதி என்று வெளியிடப்பட்டிருந்த அரசாணையை ரத்து செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.
அதன்படி, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறையை செப்டம்பர் 17ம் தேதியில் இருந்து 18ம் தேதிக்கு (திங்கள்கிழமை) மாற்றி தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். அதாவது, விநாயகர் சதுர்த்தி செப். 18ம் தேதி கொண்டாடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு, பல்வேறு கோயில்களின் தலைமை தெரிவித்திருப்பதால் அன்றைய தினம் பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
+ There are no comments
Add yours