ஆளுநர் ஆர்.என்.ரவி, ஊட்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் அவருடைய மகளுக்கு எந்த அடிப்படையில் திருமணம் நடத்தினார்? தமிழ்நாடு அரசின் பணத்தில் திருமணம் நடத்த அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளிப்பாரா? என தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியிருந்தார்.
விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகைக் கட்டணம், டீ மற்றும் காபி உட்பட உணவு, விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள், பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவும் ஆளுநரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆளுநர் குறித்து தயாநிதி மாறன் அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது என ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிகப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours