தமிழகத்தில் பருவமழை இன்னும் சில நாட்களில் பெய்ய உள்ள நிலையில் அதற்குள் தற்போது பல்வேறு இடங்களில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மிதமான கனமழை முதல் லேசான மழை வரை பெய்து வருகிறது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிவிப்பின்படி, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வரும் 17ஆம் தேதி வரையில் தமிழக்த்தில் கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து வரும் செப்டம்பர் 18,19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
,மீனவர்களுக்காக எச்சரிக்கையை பொறுத்தவரை, இலங்கை கடலோரப் பகுதிகள்,தெற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 – 45 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
+ There are no comments
Add yours