ஜெய்ப்பூரில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு “இந்தியா” கூட்டணி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் 2.9.2023 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு , சனாதனத்தை கூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று பேசினார்.
அதாவது,“டெங்கு, மலேரியாவை நாம் எதிர்க்க முடியாது. அதை ஒழிக்கத்தான் முடியும். அதேபோல, சனாதனத்தையும் நாம் அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும்” என்று உதயநிதி பேசினார்.
இந்த சூழலில், உதயநிதி இந்து மக்களை படுகொலை செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிறார் என வட மாநிலங்களில் பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருவதால்,நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று 14 ஓய்வு பெற்ற நீதிபதிகள், 130 முன்னாள் அரசு அதிகாரிகள், 118 முன்னாள் ராணுவ அதிகாரிகள் அனைவரும் கையொப்பமிட்டு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு அமித்ஷா முதல் ஜேபி நட்டா உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்,மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்க்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ,ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: சனாதன தர்மத்தை தாக்கி பேசுகிறார்கள். திமுக சனாதன தர்மத்தை தாக்கிப் பேசினாலும் காங்கிரஸ் அமைதி காக்கிறது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சோனியா காந்தி, ராகுல் காந்தி என காங்கிரஸ் தலைவர்களும் அமைதி காப்பது ஏனாம்? சனாதன தர்மம் தொடர்பான விமர்சனத்துக்கு ஏன் பதில் தராமல் இருக்கிறது காங்கிரஸ்? உலகம் ஒரு குடும்பம் என்பதைத்தானே சனாதன தர்மம் வலியுறுத்துகிறது. உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பாக விளக்கம் தர வேண்டும். “இந்தியா” கூட்டணி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
+ There are no comments
Add yours