விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், கடந்த திங்கள் கிழமை பாரதியும் விவேகானந்தரும் என்ற தலைப்பில் சென்னை தி. நகரில் சொற்பொழிவாற்றினார். அவரது இந்த உரையில் தலைவர்கள் சிலரை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறி சென்னை மாம்பலம் போலீசார் இன்று அதிகாலை, சென்னை தி நகரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று அவரை கைது செய்துள்ளனர்.
சட்டப்பிரிவு 153, 153(A), 505(a) 505(b), 505(2),SC/ST உள்பட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது செய்யப்பட்டதற்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours