இயற்கையையும், நீர்வளத்தையும் காக்க வேண்டியது அவசியம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
கொங்கு மண்டலத்தின் முதன்மையான நீர் ஆதாரமாக விளங்கும், நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பு தொடர்பாகக் கோவை பேரூர்த் தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற ‘நொய்யல் பெருவிழா’வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விழாவில் சிறப்புரையாற்றிய அவர், தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எனத் தமிழில் உரையைத் தொடங்கினார்.
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், நம் நாட்டில் நீர்நிலைகள் உடனான தொடர்பு என்பது உணர்வுகளுடன் தொடர்புடையது என்றும், ஆனால், பல ஆண்டுகள் நம் கலாச்சாரம், உயிர்த்தன்மையைச் சிதைக்கும் எண்ணத்துடன் வந்த அந்நியர்களின் படையெடுப்பு, ஆக்கிரமிப்பால் அந்த உணர்வு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இயற்கையைப் பாழாக்கி வருவதன் விளைவு தான், பருவநிலை மாற்றத்துக்குக் காரணம் என்றும், தண்ணீர் இல்லையென்றால் ஒன்றும் இல்லை என்பதனால், நீர் வளத்தைக் காக்க வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். அனைவரும் ஒரு குடும்பம் என்னும் உயரிய நோக்கையும், நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டியதன் தேவையையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.
+ There are no comments
Add yours