காசிமேடு கடற்கரையை மேம்படுத்தும் பணிகளுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை காசிமேடு கடற்கரை பகுதியில் நடைபாதை, உடற்பயிற்சிக் கூடம், உணவு கடைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. குழந்தைகளின் பயன்பாட்டிற்காக ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காசிமேடு கடற்கரையை மேம்படுத்தும் பணிகளுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடசென்னை பகுதி ஆயிரம் கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
+ There are no comments
Add yours