தமிழகத்தின் வியாபார நகரமாக விளங்கும் கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை முடிக்க ஆர்வம் காட்டாமல் இருக்கும் திமுக அரசு ஆமை வேகத்தை விட குறைவான வேகத்திலேயே ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து எஸ்பி வேலுமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில் #கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 8 குளங்கள் இருந்த நிலையில்,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் ஆட்சிக் காலத்தில், குறிச்சிக்குளம் ஏரியையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என, அவரிடம் நான் கோரிக்கை வைத்ததையடுத்து, அந்த கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியதோடு மட்டுமல்லாமல், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறிச்சிக்குளம் ஏரி பகுதியில் இந்தியாவிலேயே முதன்முறையாக 20 அடி உயரத்தில், 3 டன் எடை அளவு கொண்ட எஃகு பயன்படுத்தி, திருக்குறளில் உள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை விளக்கும் வகையில் 3000 தமிழ் எழுத்துகளுடன் கூடிய தனித்துவமான திருவள்ளுவர் சிலை அமைக்க, பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன.
மேலும், ஜல்லிக்கட்டு விளையாட்டு நினைவு சின்னம், உயர்தர வசதிகளோடு கூடிய பொழுதுபோக்கு பூங்காக்கள், மாதிரி சாலைகள், செல்ஃபி பாயிண்ட், உடற்பயிற்சிக்கான நடைபாதைகள், ஓய்வெடுக்க அமரும் இருக்கைகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, கோவையில் வரலாறு காணாத வளர்ச்சிக்கு வழிவகை செய்யப்பட்டது.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை முடிக்க ஆர்வம் காட்டாததால், ஆமை வேகத்தை விட குறைவான வேகத்திலேயே பணிகள் நடைபெற்றன.
தற்போதைய திமுக அரசு கோவை மாவட்டத்தை முற்றிலுமாக புறக்கணித்து வருவதையும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் உட்பட பொதுமக்களுக்கான வளர்ச்சித்திட்ட பணிகள் எதுவுமே நடைபெறாததையும் நானும் அண்ணன் #எடப்பாடியார் அவர்களும் பல முறை எடுத்துக்கூறி வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம்.
நீண்ட கால தாமதத்திற்கு பிறகு தற்போது குறிச்சிகுளம் ஏரியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,
அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டப்பணிகளை மத்திய நகர்புற வீட்டு வசதி அமைச்சகம் தற்போது பாராட்டியிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
இப்பணிகள் அனைத்தும் முழுமயாக நிறைவு பெற்றால், அது கோவை மாநகரின் வளமான பாரம்பரியம் மற்றும் அறிவுசார் மரபுக்கு தனித்துவமான வளர்ச்சியாக இருக்கும்.
கோவைக்கு இப்படியான சிறப்பை பெற்றுத் தந்த பெருமை, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா மற்றும் “மாண்புமிகு புரட்சித் தமிழர்” அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களையே சாரும்.
கோவைக்கு இச்சிறப்பை பெற்றுத்தந்தமைக்காக, #கோவை மக்கள் சார்பாக புரட்சித் தலைவி #அம்மா மற்றும் புரட்சித் தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மத்திய நகர்புற வீட்டுவசதி அமைச்சகம் பாராடியுள்ள நிலையில், திமுக அரசு இனிமேலும் கால தாமதம் செய்யாமல், கோவையில் கட்டப்படு வரும் பாலங்கள், புறவழிச்சாலை பணிகள், விமான நிலைய விரிவாக்கம், சாலைப்பணிகள், குடிநீர் திட்டப் பணிகள் உள்ளிட்ட அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours