தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, சிறப்பு பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்த வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலைவாய்ப்பு இல்லாததே நாங்குநேரி சம்பவத்திற்கு காரணம் என்றார். புதிய தொழில் தொடங்க முன்வருவோறுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றுமே இல்லாத பிரச்சனையை திமுக-தான் பெரிதாக்குவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார். மீனவர்களுக்காக கடந்த 28 மாதங்களாக எதையும் செய்யாத முதலமைச்சர், தேர்தலுக்காகவே இப்போது மீனவர் மாநாடு நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர், நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார்.
+ There are no comments
Add yours