ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான தடையை எதிர்த்து தில்லி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் 25 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில், “வேதாந்தா நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படையான விதிமுறைகளைகூட வேதாந்தா நிறுவனம் பின்பற்றியது இல்லை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் அனுமதிக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.
+ There are no comments
Add yours