தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் குறித்து அறிந்துகொள்வதற்காக தெலங்கானா அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர்.
முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை தெலுங்கானா மாநில முதல்வர் செயலாளர் ஸ்மிதா சபர்வால், பழங்குடியின நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்கிறது. உணவு தயாரிக்கும் முறை, அதனை பள்ளிக்கு கொண்டு செல்லும் முறை மற்றும் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படும் விதத்தை அதிகாரிகள் நேரில் பார்வையிடுகின்றனர்.
அந்த வகையில் சென்னை ராயபுரம் ஜிசிசி பழைய பள்ளி கட்டடத்தில் உணவு தயாரிக்கும் முறையை பார்வையிட்ட அதிகாரிகள், ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளிக்கு சென்று உணவு பரிமாறப்படுவதை ஆய்வு செய்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours