உடலுறுப்பு தானம் என்பது தமிழகத்தில் ஓரு இயக்கமாகவே செயல்பட்டு வருகிறது.
உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
முதலிடம்!
உறுப்பு தான தினம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: உடலுறுப்பு தானம் என்பது தமிழகத்தில் ஓரு இயக்கமாகவே செயல்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே மிகப் பரந்த மனதுடைய மக்களும், மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பும் இங்கு இருப்பதால்தான் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளோம்.
தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம். அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours