மருத்துவம் பற்றி எதுவுமே தெரியாமல் நீட்டை எதிர்ப்பதா?” தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

Spread the love

மருத்துவக் கல்லூரியை பற்றியோ மருத்துவம் பற்றியோ எதுவும் தெரியாமல் அதைப் பற்றி பேசுகின்றனர். கவர்னரை பதவி விலகிக் கொண்டு போட்டியிட வேண்டும் என்று கூறும் இவர்கள், மருத்துவம் பற்றி தெரியாமலேயே நீட் பற்றி பேசுவது எப்படி சரியானதாக இருக்க முடியும்? என தெலங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியா முழுவதும் விடியலை தர காத்திருக்கிறேன் என கூறுகிறார். தனது கூட்டணியில் இருக்கும் கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை வாங்கி தர முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நமது மாநிலத்திற்கும் பக்கதில் உள்ள மாநிலத்திற்கும் தேவையான காவிரி நீரையே பெற்று தர முடியவில்லை என்றால், இந்தியா முழுவதும் சென்று என்ன சாதிக்க போகிறார்கள் என்று தான் தெரியவில்லை. தமிழக முதலமைச்சர் கர்நாடகா முதலமைச்சருக்கு பேச முடியாதா? ஒரு விடியலை டெல்டா விவசாயிகளுக்கு தர முடியவில்லை என்றால் அது எந்த மாதிரியான விடியல் என்று எனக்கு தெரியவில்லை என தெரிவித்தார்.

எதை செய்தாலும் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் உயிருடன் விளையாடுகிறார்கள் என்பது எனது கருத்து. அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறார்கள். பல லட்சம் பேரிடமிருந்து கருத்துக்களை வாங்கி இந்த புதிய கல்விக் கொள்கை நமக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் மாணவர்கள் அறிவாளியாக வெளிவருவதை நீங்கள் விரும்பவில்லையா? எனக் கேட்கத்தான் தோன்றுகிறது எனக் கூறினார்.

நீட் கல்வி முறையின் மூலம் மருத்துவ கல்வி முற்றிலும் வியாபாரம் ஆக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரியினை நடத்துபவர்கள் அவர்களுக்கு தேவையானவர்களை மருத்துவம் படிக்க அனுப்புவார்கள். அவர்கள் குறைந்த அளவு மதிப்பெண்ணுடன் மருத்துவம் பயில வந்து, எந்த அளவிற்கு கடினப் படுகிறார்கள் என்பதை நான் நேரில் பார்த்தவள். அதனால் தான் நான் நீட்டை முழுமையாக ஆதரிக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும், மருத்துவக் கல்லூரியை பற்றியோ மருத்துவம் பற்றியோ எதுவும் தெரியாமல் அதைப் பற்றி பேசுகின்றனர் இவர்கள் கவர்னரை பதவி விலகிக் கொண்டு போட்டியிட வேண்டும் என்று கூறும் இவர்கள் மருத்துவம் பற்றி தெரியாமலேயே நீட் பற்றி பேசுவது எப்படி சரியானதாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பிய அவர், எங்களைப் போன்றவர்கள் மருத்துவ கல்லூரியை பற்றி தெரிந்து கொண்டு நீட்டை பற்றி பேசுங்கள் என்று கூறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours