மாணவர்களை தண்டிக்கும் உரிமைகூட ஆசிரியர்களுக்கு இல்லை..!

Spread the love

சென்னை, ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் இன்று ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ‘எண்ணித்துணிக’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றனார்.

அப்போது பேசிய அவர், “நான் படிக்கும்போது ஆசிரியர்களை ‘குரு’ என்று தான் அழைப்பேன். தினமும் 8 கி.மீ. தூரம் நடந்து சென்று கல்வி கற்றேன். எனது ஆசிரியர் குளிப்பதற்கு தண்ணீர் இறைத்து கொடுத்துள்ளேன். என் ஆசிரியர் உறங்கும் போது அவரது கால்களை பிடித்து விட்டுள்ளேன். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான உறவு அப்படித்தான் இருந்தது”

“மாணவர்களை தண்டிப்பது அவர்களை நல்வழிப்படுத்ததான் என்பதை பெற்றோர்கள் உணரும் நிலையில் இல்லை. அதோடு நமது சட்டத்தில் கூட தவறு செய்யும் மாணவர்களை தண்டிக்க ஆசியர்களுக்கு இடமில்லை. எதிர்காலத்தில் தேசிய கல்விக்கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

முன்னதாக, இதே போன்ற ஒரு உரையாடலில் நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது கையெழுத்திடுவீர்கள் என கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் விலக்கு மசோதாவுக்கு நான் ஒரு போதும் கையெழுதிடமாட்டேன். அது மாணவர்களின் திறனை குறைத்து மதிப்பிடும் செயலாகும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours