உலகம் முழுவருதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்படத் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக புகைப்பட தினத்தின் தோற்றம் ஆகஸ்ட் 19, 2010 அன்று ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர்கள் கோர்ஸ்கே ஆரா மற்றும் டிம் ஹார்வி ஆகியோர் இந்த முயற்சியைத் தொடங்கினார்கள்.
உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு பத்திரிகை மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் குவிந்தனர். அவர்களை பார்த்த முதலமைச்சர், தன்னிடம் இருந்த காமிரா மூலம், அங்கிரருந்த பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்களை முதல்வர் புகைப்படம் எடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக பதிவிடப்பட்டுள்ள டிவிட்டர் பதிவில், உலக புகைப்பட தினத்தையொட்டி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்று, முதலமைச்சர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
+ There are no comments
Add yours