ஆளுநரை பொறுத்தவரை நீட் குறித்து பேசுவதில் எந்த தவறுமில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் ,ஆளுநரை பொறுத்தவரை நீட் குறித்து பேசுவதில் எந்த தவறுமில்லை எனவும் நீட் தேர்வு விவகாரத்தில் தேவையில்லாமல் திமுகவினர் கவர்னரை வம்புக்கு இழுக்கின்றனர் எனவும் பேசியுள்ளார்.
ஆளுநரை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று சம்பந்தமில்லாமல் பேசுவது தவறு எனவும் ஆளுநரை தமிழ்நாட்டில் போட்டி போட அழைப்பது போல, ஆளுநர் பீகாருக்கு போட்டி போட அழைத்தால், திமுகவினர் இந்தி தெரியாமல் எங்கே போவார்கள் எனவும் அவரை எதிர்த்து கருப்புக் கொடி கட்டுவதால் எதுவும் நடக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் அந்த பொறுப்பில் இருப்பதற்கு சைலேந்திர பாபுவுக்கு தகுதி உள்ளதா என்று ஆளுநர் பார்ப்பதாக தான் நினைக்கிறேன் எனவும் இதில் தான் கருத்து சொல்வது சரியாக இருக்காது எனவும் பதிலளித்துள்ளார்.
+ There are no comments
Add yours