ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் 7வது சீசன் சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்தது. ஆசிய ஹாக்கியில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது. அதன்படி, இந்தியா, மலேசியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நான்கு முறை (2011, 2016, 2018, 2023) கோப்பை வென்ற முதல் அணியானது இந்தியா.
இந்த வரிசையில் பாகிஸ்தான் (2012, 2013, 2018) இரண்டாவதாக உள்ளது. மலேசிய அணி முதன் முறையாக 2வது இடம் பெற்றது. இந்நிலையில், சர்வதேச ஹாக்கி அணிகளின் தரவரிசையில் இந்தியா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது.
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் தொடரை வென்றதால் இந்திய அணி ஏற்றம் கண்டுள்ளது. ஹாக்கி பெண்கள் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 8வது இடத்தில் உள்ளது.
+ There are no comments
Add yours