அரசு பள்ளிகளில் பத்து ஆண்டுகள் பணியாற்றிய ஆசிாியா்கள் தேர்வு நிலை பெற வேண்டும் என்றால், டெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற மாவட்ட கல்வி அலுவலர் நிபந்தனையால் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை கல்வி மாவட்டம், காமராஜர் நகர் அரசு உயர்நிலை பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியர் வேல்வராஜ் என்பவர், ஆசிாியர் பணியில் 10 ஆண்டு பணி நிறைவடைந்ததையொட்டி, தேர்வு நிலை அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில் கோவை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அவரது விண்ணப்பத்தை நிராகரித்து, குறைபாடுகள் உள்ளது என சுட்டிக்காட்டி உள்ளார்.
அதன்படி, அவரது செயல்முறைகள் கூறியிருப்பதாவது, 29.7.2011க்க பிறகு பட்டதாரி ஆசிரியராக பணி நியனம் பெற்றவா்கள் ஆசிாியா் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என W.A No 313, 333, 1891, 2050, 2082, 2617, 2795, OF 2022 வழக்குகளில் சென்னை உயர்நீதி மன்ற ஆணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், வேல்ராஜ் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத நிலையில், கருத்துரு பரிசீலிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், குறைபாடுகளை நிவர்த்தி செய்து சரிபார்ப்பு பட்டியலில், தலைமை ஆசிரியர் உரியமுறையில் பரிசீலித்து உாிய ஆவணங்கள் இணைத்து தோ்வு நிலை பெற தகுதியிருப்பின் மட்டும் கருத்துவிருனை மீள அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியா் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
+ There are no comments
Add yours