சமீபத்தில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்பட, இன்று (செப்டம்பர் 1ம் தேதி) 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் விலை ரூ.157.50 குறைந்து ரூ.1,852.50-யில் இருந்து ரூ.1,695க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிலிண்டர் விலை குறைந்துள்ளதால் இனி ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது வணிக சிலிண்டரின் விலையும் ரூ.157.50 குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து 3 மாதங்களாக குறைந்து வரும் நிலையில், உணவு மற்றும் டீ கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொல்கத்தாவில் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.166.5 குறைந்து தற்பொழுது ரூ.1636 ஆக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இதன் விலை ரூ.1802.50 ஆக இருந்தது. மும்பையில் வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.158.5 குறைந்து தற்பொழுது ரூ.1482 ஆக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இதன் விலை ரூ.1640.50 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours