கடலூர் வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவருக்கு 22 வயதில் சரண் என்ற மகன் உள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தனது வீட்டில் இருந்த காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற அவர், மாலை வரை ஊர் சுற்றியுள்ளார். அதன் பின் காரை வேப்பூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லேனா திருமண மண்டபம் அருகே நிறுத்தி விட்டு மது அருந்தியுள்ளார்.
இரவு காரிலேயே உறங்கிய அவர், இன்று அதிகாலை எழுந்து, திடீரென காருக்கு தீ வைத்து கொளுத்தினார். இதைப்பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள், உடனடியாக போலீஸுக்கு தகவல் அளித்தனர். போலீஸார் அங்கு வருவதற்குள் சரண் வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டார். வண்டி எண்ணை வைத்து, அவரின் தந்தையை தொடர்பு கொண்ட போலீஸார், கார் எரிப்பு தொடர்பாக விசாரித்தனர். அதில், சரண் தனது மகன் தான் என்றும், அவர் மனநலம் பாதிப்பட்டு தற்போது தான் சிகிச்சையில் இருந்து திரும்பியதாகவும் கூறினார். இதையடுத்து, காவல் துறையினர் அவரிடம் இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மனநிலை சரியில்லாத வாலிபர் தனது காரை தானே தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours