தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த சேர்கைக்கு இன்று செப்.11ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி.
கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் விண்ணப்ப பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாயும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 250 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் விண்ணப்பங்களில் தங்கள் விண்ணப்ப வரிசையின் படி கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இணையதளம் மூலமாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் வங்கி வரை ஓலை மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கட்டணத்தைச் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று செப்டம்பர் 11ம் தேதி உடன் விண்ணப்ப பணிகளுக்கான கால அவகாசம் முடிவடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours