470-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது.
ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது, இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 206 அல்லது 3.0% என உயர்ந்து ரூ.7,077 ஆக உள்ளது.
கச்சா எண்ணெய விலை உயர்ந்தபோதிலும் 470-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், சென்னையில் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.
+ There are no comments
Add yours