மதுரை மாநகரில் நேற்று நடைபெற்றது எழுச்சி மாநாடு அல்ல, எடப்பாடி பழனிசாமியின் வீழ்ச்சி மாநாடு என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் .
மதுரை மாநகரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தொண்டர்கள் வெள்ளத்தில் மாநாட்டிற்கு வருகை எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி பல்வேறு தீர்மானங்களும் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது :
மதுரை மாநகரில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாநாடு எழுச்சி மாநாடு அல்ல, எடப்பாடி பழனிசாமியின் வீழ்ச்சி மாநாடு என்று கூறினார். நேற்று நடந்த மாநாட்டில் 20 லட்சம் பேர் கலந்துகொண்டாக கூறப்படுகிறது ஆனால் வெறும் இரண்டரை லட்சம் பேர் மட்டுமே அந்த மாநாட்டில் பங்கேற்றனர் .
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்து சந்திக்கவுள்ளோம். வரும் காலத்தில் கூட்டணி அமைத்தால் அது தேசிய கட்சிகளுடன் மட்டும் தான் . ஒருவேளை கூட்டணி இல்லையென்றாலும் தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours