சனாதனம் குறித்த எந்தவிதமான புரிதலும் இல்லாமல் அமைச்சர் உதயநிதி பேசியுள்ளதாகவும், அவருக்கு அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கான தகுதி இல்லை எனவும் சசிகலா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவிடம், மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு மகளிர் உரிமைத் தொகை வாக்குறுதியை அளித்தது திமுக. இது அமல்படுத்த முடியாத ஒரு திட்டமாகும்” என்றார்.
தொடர்ந்து சனாதனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘’அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். ஆனால், ஒரு சமூகத்தை குறிப்பிட்டு ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிறார் உதயநிதி. அவர் அமைச்சராக நீடிக்கவே தகுதி இல்லை. அந்த கூட்டத்தில் உடன் இருந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், உதயநிதியிடம் அதே மேடையில் சொல்லி திருத்தி இருக்க வேண்டும். சனாதனம் குறித்த புரிதல் இல்லாமல் பேசுகிறார். அதனை திருத்த வேண்டியவரோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்’’ என்றார்.
+ There are no comments
Add yours