தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் அனைத்து காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், 5.40 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல்லும் நாட்டினார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் உள்ள மருத்துவா்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து காலி பணியிடங்களும் ஓரிரு மாதங்களில் நிரப்பப்படும் என உறுதியளித்தார். மேலும் தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதத்தில் 500 மருத்துவமனைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours